மே தின நினைவு சின்னத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து வீரவணக்கம்

0 269
Stalin trichy visit

மே தினம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் மாநகர செயலாளர்  மு.மதிவாணன் மண்டல தொமுச பொதுச் செயலாளர்
ஜோசப்நெல்சன் முன்னிலையில் திருச்சி சுப்பிரமணியபுரம் கலைஞர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த மே 1 தின நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்
நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன் பொன்செல்லையா பகுதி கழகச் செயலாளர் மணிவேல் மற்றும் மாவட்ட மாநகர நகர ஒன்றிய பேரூர் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இந்த சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கும், ஒவ்வொருவரும் அந்தந்த சமூகத்திற்காக ஒவ்வொரு வகையிலும் உழைத்து வருகின்றனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மே தின வாழ்த்துக்களை, தொழிலாளர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.