தெருக்களின் பெயர் பலகைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தெருக்களின் பெயர் பலகைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவெறும்பூரை அடுத்த காட்டூர் – ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு மற்றும் ராஜ்நகர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவுற்று, மாநகராட்சியால் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு பெயர்ப் பலகைகள் இல்லாமல் இருந்தன, வெளியூரிலிருந்து வருகை புரிவோருக்கு தெருக்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, இக்குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் , குடியிருப்போர் நலச் சங்கத்தின் முயற்சியால், அவர்களின் சொந்த செலவில் உலோகத்திலான தெருப் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டன.
இப்பெயர்ப் பலகைகளை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (31-08-25 – ஞாயிறு) திறந்து வைத்து, நகர் வாசிகளை வெகுவாகப் பாராட்டினார்.
தாய்ப்பால் தானம் அளித்து சாதனை புரிந்த அருகாமை பகுதியைச் சார்ந்த பெண்மணியான திருமதி செல்வ பிருந்தா அவர்களை, இந்நிகழ்வின் போது அமைச்சர் பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் நீலமேகம் , மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர் வாசிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.