உப்பாறு வடிகால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 276
Stalin trichy visit

திருச்சி, பிப். 28  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமத்தில் உள்ள உப்பாறு வடிகால் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 28 ந்தேதி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார்.

லால்குடி அருகே நகர் கிராமத்தில் 2024- 25 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நீர்வளத்துறை தூர்வாரும் திட்டப் பணிகளின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பில் உப்பாறு வடிகாலில் 1030 மீட்டர் தூரம் வரை தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், லால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன், லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆங்கரை சண்முகநாதன், மணக்கால் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.