புதிய கூட்டுறவு கடன் சங்கத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 244
Stalin trichy visit

திருச்சி, பிப். 28  திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் சமயபுரம் நகர புதிய கூட்டுறவு கடன் சங்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு  இன்று காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார்.

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சமயபுரத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் சமயபுரம் நகர புதிய கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த புதிய கூட்டுறவு கடன் சங்கத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், மற்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.