அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

0 452
Stalin trichy visit

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவித்து டாக்டர் சேகர் என்பரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கும், அமைச்சர் மஸ்தானுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் காரணமாக தற்போது மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பொன்முடி மகன் கெளதம சிகாமணியை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.