10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் அறிவிப்பு

0 402
Stalin trichy visit

சென்னை, அக். 14 தமிழ்நாட்டில் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
அதன்படி அதன்படி 12 ஆம் வகுப்பிற்கு 2025 மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 வரையிலும், 11 ஆம் வகுப்பிற்கு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 வரையிலும் , 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரையில் தேர்வுகள் நடைபெறும்.

செய்முறை தேர்வுகள்: 12 ஆம் வகுப்பிற்கு 2025 பிப்ரவரி 7 முதல் 14 ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பிற்கு பிப்.15 முதல் 21 வரையிலும், 10 ஆம் வகுப்பிற்கு பிப்.22 முதல் 28 வரையிலும் நடைபெறும்.
தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்பிற்கு 2025 மே.9 ஆம் தேதியும், 11, 10 ஆம் வகுப்புகளுக்கு மே19 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.