பயனாளிகளுக்கு மாடுகளை அமைச்சர்கள் வழங்கினர்
திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகிலுள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையிலுள்ள பசு மற்றும் காளை மாடுகளில் 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்றும் என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா பசு ஒன்றும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகளை பச்சைமலையிலுள்ள பழங்குடியின மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கும் அமைச்சர்கள் கே.என்.நேரு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார். ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட பலர் உள்ளனர்.