மணப்பாறையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட முல்லை சந்திரசேகர் விருப்பமனு

0 267
Stalin trichy visit

திருச்சி, பிப்.13  திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட வக்கீல் முல்லை சந்திரசேகர் நேற்று சென்னை தேமுதிக தலைமை கழகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார். அவரது விருப்ப மனுவை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம்  அளித்துள்ளார்.

நிகழ்வின்போது, கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ப.பார்த்தசாரதி, கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.மோகன்ராஜ் உடனிருந்தனர். முல்லை சந்திரசேகர், மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியும், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு தேமுதிக தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகராகவும் பதவி வகித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.