முரசொலி மாறன் பிறந்த நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஆக. 17 முரசொலி மாறன் 91வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.