மண்ணச்சநல்லூரில் புதிய துணை மின் நிலையம் : தலைமை மின் பொறியாளர் ஆய்வு

0 147
Stalin trichy visit

திருச்சி, ஜன.24 எம்எல்ஏ கதிரவனின் மானிய கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு – ரூ 200 கோடி மதிப்பீட்டில் மண்ணச்சநல்லூரில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நில ஆய்வு செய்த தலைமை மின் பொறியாளர்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மண்ணச்சநல்லூர் தொகுதியின் முக்கிய மானிய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தொகுதியின் முக்கிய மானிய கோரிக்கைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு கோரிக்கை வாசித்து முன் வைத்தார்.

அதில் முக்கிய கோரிக்கையாக மண்ணச்சநல்லூர் தொகுதியில் 52 அரிசி ஆலைகள், 1 சிமெண்ட் ஆலை , தனியார் பால் உற்பத்தி நிலையம் மற்றும் சிறு குறு தொழில் செய்யும் மக்கள் அதிகம் உள்ளதால் சீரான மின்சாரம் இல்லாமல் குறைந்த மின்னழுத்தமும், மின்தடை மற்றும் மின்சார பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்சார பற்றாக்குறை சரி செய்ய மண்ணச்சநல்லூரில் புதிய துணை மின்நிலையம் (110/22 KV மின்சாரம்) அமைத்து தர வேண்டுமென மானிய கோரிக்கையை முன் வைத்தார்.

மேலும் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் பொதுமக்கள் நலன் கருதி துணை மின் நிலையம் அமைக்கும் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மின்சார துறையிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதி உட்பட்ட அதனை ஊராட்சி மற்றும் கிராமப்புற மக்களின் நலன் கருதி 110/22 கிலோ வாட்டில் சுமார் ரூ 200 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ 1 .37 லட்சத்தில் நேற்று மாலை மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் இனாம் கல்பாளையம் சாலையில் உள்ள நிலத்தை தலைமை பொறியாளர் செந்தாமரை, மண்ணச்சநல்லூர் உதவி செயற்பொறியாளர் சண்முகம் , உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், பேரூராட்சி செயலாளர் கிருஷ்ணவேணி ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தி விரைவில் மண்ணச்சநல்லூரில் புதிய துணை மின் நிலைய அமைக்கும் பணிகளை தொடங்க தலைமை பொறியாளர் செந்தாமரை உத்தரவிட்டார்.
மேலும் இந்த ஆய்வின் போது வியாபாரிகள் நல சங்கம், அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.