தமிழக ஏரி – ஆற்றுப் பாசன விவசாய சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் புரவலர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் புரவலர் பூ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார் முன்னதாக மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்த்சாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் மாநில செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை கடலூர் மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.