வடக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

0 237
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1 திருச்சி மாவட்டம்,  முசிறியில்  வடக்கு மாவட்ட திமுக சார்பில்  பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று  நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் முசிறி இராணி, துறையூர் தங்க கமல், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கேசவன் சிறப்புரையாற்றினர். அப்போது கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆக்குவதற்கும் ,திமுக ஆட்சி அமைக்கவும், பாடுபட வேண்டும். தேர்தல் பணியில் பாக முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பாக முகவர்களை தலைமை கழகம் அறிவுறுத்திய படி நியமித்து சட்டமன்றத் தேர்தல் வியூகம் அமைப்பது, தலைமை கழகம் அறிவுறுத்தும் பணிகளை மிக விரைவாக செயல்படுத்துவது, தகவல் தொழில்நுட்ப அணி சேனலை பின்பற்றி அதில் பாக முகவர்களை அதிகளவில் இணைப்பது,தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்கு செய்து வரும் கட்டணம் இல்லா பேருந்து, மகளிர் உரிமை தொகை,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி,விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறுவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, கேகேஆர்.சேகரன், காட்டுக்குளம் கணேசன், வீரபத்திரன், அண்ணாதுரை, சரவணன், மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், நகர செயலாளர்கள் விஜய் ஆனந்த், தக்காளி தங்கராசு, தர்மராஜ், சுப்பிரமணியன் ,
நிர்வாகி பிரபாகரன்,அம்மன் பாபு, திருச்சி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.