நெல் வயல்வெளி பள்ளி வகுப்பு தொடக்கம்
திருச்சி, செப். 26 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தானியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல்வெளி பள்ளி வகுப்பு இன்று தொடங்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர் அருகே அத்தானியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2024- 25 ம் ஆண்டுக்கான நெல் வயல்வெளி பள்ளி வகுப்பு தொடங்கப்பட்டது. இதில்
மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி செல்வராணி தலைமையேற்று தமிழ் நாடு நீர்வள நிலவள திட்டம் குறித்தும் நடப்பு ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக விவசாயிகளுக்கு உரை ஆற்றினார். வேளாண்மை அலுவலர் பரமசிவம் விதை தேர்வு, விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்து உரை ஆற்றினார்.
விதை சான்றளிப்பு துறையின் சார்பில் விதை சான்று அலுவலர் ரமேஷ் சான்று பெற்ற விதைகள் குறித்தும் விதை பண்ணை அமைப்பது குறித்தும் உரை ஆற்றினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அபிராமி நன்றி உரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.