லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்

0 73
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  திருச்சி மாவட்டம், லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது.

லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டில் மார்ச் 22 ம் தேதி பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது.பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் மார்ச் 30 ம் தேதி நடைபெற்றது. தேரோட்டம் அதிகாலை காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே. என். அருண் நேரு எம் பி மாவட்ட செயலாளர் கா வைரமணி மற்றும் உதவி ஆணையர் க.அருட் செல்வம் ,தக்கர் கி. உமா இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் வா. வெண்ணிலா, கோயில் செயல் அலுவலர் சுந்தரி, குருக்கள்கள், கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.