கோயில் பிரச்சினை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பிரமனார் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக 3 பிரிவினர் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரை ஒதுக் கிவிட்டு ஒரு தரப்பினர் மட்டும் முன்னின்று பாலாலயம் செய்துவிட்டதாக எழுந்த பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தை
கூட்டத்தில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாவியை வைத்திருக்கும் நபர் எவ்வித பாகுபாடும் இல்லாமல் சாவியை வழங்க வேண்டும். பூஜை செய்வதில் இடையூறு செய்யக் கூடாது. கோயில் திருமண மண்டபம் வரவு செலவு கணக்கு குறித்து அனைத்து தரப் பினரும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வு களிலும் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்ல முறையில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.