சிறந்த ஆட்சிக்கு மேற்கு தொகுதி மக்கள் ஆதரவு தருவார்கள் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

0 77
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வேட்புமனுத் தாக்கல் – சிறந்த ஆட்சியை மீண்டும் மக்கள் தருவார்கள் – அமைச்சருக்கே கே என் நேரு பேட்டி

தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ உற்சாகமாக வருகை தந்து, தேர்தல் நடத்தும் அலுவலகத்தை அவர் அடைந்தார்.தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை உரிய ஆவணங்களுடன் கே.என்.நேரு சமர்ப்பித்தார்.

இந்த நிகழ்வின் போது மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், விசிக மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே நேரு அளித்த பேட்டியில் .

தளபதியின் ஆசியோடு வேட்பு மனு முன் தாக்கல் செய்துள்ளேன்.
மீண்டும் மேற்கு தொகுதியில் மக்கள் வழங்குவார்கள்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு …..

ஏற்கனவே இதற்கான பதிலை தெரிவித்துள்ளேன். தேர்தலில் யாரும் எங்கேயும் போட்டியிடலாம் அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது. அந்த வகையில் அவரும் போட்டியிடுகிறார். மக்கள் யாருக்கு ஆதரிப்பார் என்று தெரியும்.

இரண்டு தொகுதியில் போட்டியிடுவது பயம் காரணம் என தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ….

பயம் இருக்கலாம் பயமா என்று எனக்கு தெரியாது ஆனால்,
,கிழக்கு தொகுதியை பொருத்தவரை வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கிறோம்.

தேர்தல் அறிவிப்பில் மதுவிலக்கு சம்பந்தமாக ஏதும் இல்லை என்ற கேள்விக்கு ……

இருக்கிற அறிவிப்புக்கு பாராட்ட தெரிவித்தாலே போதும்.
இந்தப் பொருட்கள் தான் என்று சொல்லாமல் கூப்பன் தருவது, நெல் குவிட்டாலுக்கு 300 தருவது,
கரும்புக்கு 4500 தருவது, முதியோருக்கு ஓய்வூதியம் 2000 ஆக உயர்த்தி தருவது, 10 லட்சமாக மருத்துவ இலவச உதவித்தொகை உயர்த்தி தருவது, விவசாய காலுக்கு திட்டங்களை நிறைய முதலமைச்சர் தந்திருக்கிறார். ஏற்கனவே முதல்வர் கூறியது போல
தேர்தல் அறிக்கை தேர்தல் கதாநாயகனாக இருக்கிறது
மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் சிறந்த ஆட்சி உருவாக்க மக்கள் ஆதரவு தருவார்கள் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.