மழையின் காரணமாக சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் திருச்சி மக்கள் ஏமாற்றம்

0 124
Stalin trichy visit

திருச்சி, செப்.8 திருச்சியில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு நிகழ்ந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல்  பொதுமக்கள் ஏமாற்றம்

சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி முழுநிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது ஏற்படும்.

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் முழு சந்திர கிரகணம் இன்று வானில் தென்படுகிறது, நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு நிறைவு பெறும் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பொதுமக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தில், சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும் நிலவை பார்த்து மகிழ Tamilnadu astronomy science Society சார்பில் மற்றும் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் இணைந்து திருச்சியில் அண்ணா அறிவியல் கோளரங்கம் தென்னூர் அறிவியல் பூங்கா, பிஷப் ஹீபர் கல்லூரி , துறையூர் , கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த டெலஸ்கோப் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமானோர் வருகைதந்து, ரத்த சிகப்பு நிறத்தில் தோன்றிய நிலவின் எழில்மிகு அழகை கண்டனர் .இது குறித்து வானிலை ஆர்வலர்கள் சந்திரகிரகணம் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கி கூறினார்கள்.

திருச்சியில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக திருச்சி மாவட்டத்தில் சந்திர கிரகணம் தென்படவில்லை.சந்திர கிரகணத்தை பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் வந்த பொதுமக்கள் மொபைல் ஆப் மூலம் சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்தனர்

இதே போன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.