வருவாய் தீர்வாயத்தில் சி.பி.எம்.எல். கட்சி சார்பில் மனு

0 388
Stalin trichy visit

திருச்சி, மே 28  மணப்பாறையில் செவலூர் கிராமத்திற்கான வருவாய் தீர்வாயம்  ( ஜமாபந்தி)  வட்டாட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது சிபிஎம்எல் கட்சி 27வது வார்டு உறுப்பினர் மனுக்கள் அளிக்கப்பட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செவலூர் கிராமத்திற்கான ஜமாபந்தி
வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிபிஐ (எம்.எல்) கட்சியின் சார்பாக 27 – வது வார்டு மணப்பாறைபட்டி ரோடு சர்வே எண்-837ல் குடியிருக்கும் 40 குடும்பங்கள் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா அரசானையின் படி வழங்க வலியுறுத்தியும், ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மணப்பாறை  மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு AlCCTU ஆட்டோ ஒட்டுநர்களை ஆட்டோ ஒட்டவிடாமல் தடுக்கும் நபர்களை அழைத்து காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்  தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மணப்பாறைபட்டிரோடு சர்வே எண்-732/1, TS NO -6 /I, புதிய TS NO – 6/1A, ல் தனி நபருக்கு கொடுத்த 7 ஏக்கர் இனாம் சொத்தை பறிமுதல் செய்து அந்த இடத்திற்கு நகராட்சி சார்பாக அவசர அவசரமாக கொடுக்கபடும் DTCP அப்ரூவல் கொடுக்கும் முடிவை அரசு கைவிட்டு மேற்படி இடத்தை அரசு உடமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகர செயலாளர் பி.பாலு தலைமையில் உதவி ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டது.

நிகழ்வில் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்டகுழு உறுப்பினர் இளையராஜா, ஆட்டோ சங்க செயலாளர் கமல், நிர்வாகிகள் பாலகுமரன், ராயப்பன், தினேஷ்பாபு,
சொக்கலிங்கம், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.