ஜோசப்லூயிசை வேட்பாளராக அறிவிக்க கோரி மனு
திருச்சி, மார்ச் 5 திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருநேருவை அவரது இல்லத்தில் சந்தித்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திருச்சி மண்ணின் மைந்தன் ஜோசப் லூயிஸ் அடைக்கல் ராஜை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்று திருச்சி காங்கிரஸ் முன்னாள் மனித உரிமை துறை சார்பாகவும் இந்திரா காந்தி பேரவை சார்பாகவும் காமராஜர் பேரவை சார்பாகவும் மனு சமர்ப்பித்தார். உடன் வில்சு முத்துக்குமார் மாநகர துணைத் தலைவர், விளம்பர பிரிவு உறையூர் சிவா, கோட்டத் தலைவர்கள் ஓவியர் கஸ்பர் ஜெரால்டு, வார்டு தலைவர்கள் நடராஜ் எபினேசர் ஜோசப், கருமண்டபம் மரிய சூடு,ரோஜர், திருச்சி ஏ எஸ் சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்