வாய்க்கால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 292
Stalin trichy visit

திருச்சி, ஏப்.7  வாய்க்கால் ஆக்கிரமிப்பு பாதிக்கப்படும் கிராம பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா வடுகப்பட்டி, . ஆளிப்பட்டி மொண்டிப் பட்டி கிராமம் பகுதியில் உள்ள கள்ளுக்கட்டு குளத்தில் இருந்து மொண்டிப் பட்டிகுலத்திற்குச் செல்லும் சுமார் 90 அடி வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
எனவே மேற்படி ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி சமூக ஆர்வலர் வெங்கடேசன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்,

மேலும் இந்த ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடம் சமுதாய கூடம் தகனம் செய்யும் மையம் போன்றவை நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.