த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி
திருச்சி, செப்.10 திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்த 23 நிபந்தனைகள் அனைத்தையும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது..
தவெக பிரச்சார பயணத்திற்கான போலீசாரின் அனுமதி கடிதம் மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
23 நிபந்தனைகளை மீறினால் வழக்குப் பதியப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை.