வாயால் வடை சுடும் பிரதமர் மோடி : தி.மு.க.வினர் நூதன பிரச்சாரம்

0 239
Stalin trichy visit

வாயால் வடை சுடும் பிரதமர் மோடி- திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நூதன பிரச்சாரம்

திருச்சி, மார்ச் 5  திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.கே அருண் தலைமையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கையில் வடையுடன் திருச்சி உறையூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு தாங்கள் எடுத்துச் சென்ற வடைகளைக் கொடுத்துவிட்டு, இத்தனை காலம் வடை வடையாய் சுட்டுக்கொண்டு இருக்கும் மோடிக்கு இனியும் வாக்கு அளித்து விடாதீர்கள் என்றும், ஏற்கனவே அவர் சுட்ட வடைகளை உண்ணவே ஆட்கள் இல்லை என்றும் மோடியை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் இந்த விசித்திர பிரச்சாரத்தை செய்துள்ளனர். இந்த விசித்திர பிரச்சாரத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் சிரித்தபடி வரவேற்பு கொடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.