ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, மார்ச் 28 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் உள்ள முகம்மதியா புரத்தில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்நிலையில் சாலை பணிகளுக்கான ஆக்கிரமிப்புகளை அகற்றிட எந்தவித அறிவிப்பும் இல்லாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் தனியார் சிலருடன் சேர்ந்து மக்களிடம் ஆவணங்களை கேட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பாலக்குறிச்சி – மணப்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் மற்றும் வருவாய்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்
சுவேதா, மற்றும் தண்டல் ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.