முசிறியில் திமுக அரசைக் கண்டித்து புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப். 14 முசிறியில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்பு..
திருச்சி மாவட்டம், முசிறி தா.பேட்டை சாலை ரவுண்டானா பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் என் ஆர் சிவபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட முசிறி கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முசிறி நகர நிர்வாகிகள் இணைந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முசிறி தொட்டியம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் அமமுக மாநில நிர்வாகியுமான ராஜசேகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், அவர் பேசுகையில் 100 நாள் வேலை திட்டத்தை இல்லை என பரப்பும் திமுக அரசை கண்டித்தும், அப்பா, மகன், பேரன் என பரம்பரையாக முதலமைச்சர் பதவி வகிக்கும் குடும்ப ஆட்சியை அகற்றி தூக்கி எறிய வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி பேசுகையில்
தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறிய பொழுது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இரண்டு ஏக்கர் வழங்குவோம் என சொல்லி கையளவு நிலம் வழங்குவோம் என ஏமாற்றுகின்ற அரசு என கூறினார், தொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடைபெற்று வருவதாகவும் அதிமுக ஆட்சியில் எந்த நிகழ்வுகளும் நடக்கவில்லை எனவும்,
இதுவரை இன்று அனைத்து துறைகளும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஏமாற்று வேலையாக ரூபாய் 5000 வழங்கியுள்ளது அரசு என குற்றச்சாட்டு, என் ஆர் சிவபதி பேச்சு, தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் மற்றும் அமமுக பின்னர் மற்றும் அனைத்து கூட்டணி கட்சியினரும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்