மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுகொடுக்கும் போராட்டம்

0 473
Stalin trichy visit

திருச்சி_மணப்பாறை அருகில் உள்ள #TNPL அட்டைபெட்டி &மரக்கூல் தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளிவரும் நஞ்சுகழிவுகளால் பாதிக்கப்பட்ட 100_கிராமங்களில் ஏற்படும் தீமை பாதிப்புகளை தடுக்ககோரியும்! பகுதி மக்களுக்கு காற்றில், நீரில், நிலத்தில், ஏற்படும் மாசுகளை தடுக்ககோரியும் அப்பகுதி வருங்கால சந்ததிகளின் நலன்கருதி TNPL தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாசு, மற்றும் காற்று மாசு, ஆகியவற்றின் காரணமாக பகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள காற்றுமாசு , குடிநீர்மாசு , விவசாயம் செய்ய தேவையான நிலத்தடி நீர்! குடிநீர் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாசுக்களை அகற்றகோரி மாபெரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுகொடுக்கும் போராட்டத்தில் 200 மேற்பட்ட பொது மக்கள் வழக்கறிஞர் திருச்சி NS.திலீப் அவர்கள் தலைமையில் அணிதிரண்டனர்.

மாவட்ட ஆட்சியரிடம் நேரில் விபரங்களை தெரிவித்து செய்தியாளர்களிடம் அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் திருச்சி NS.திலீப் ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்

Leave A Reply

Your email address will not be published.