துறையூர் அருகே பட்டா கேட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
திருச்சி, பிப்.6 திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட இருபதாவது வார்டு காமராஜ் நகரில் வசித்து வரும் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்காமல் கடந்த பல வருடங்களாக ஏமாற்றி வரும் அதிகாரிகளை கண்டித்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 40-க்கும் மேற்பட்ட வருடங்களாக வசித்து வருவதாகவும் வீட்டு வரி ஆறு ரூபாயாக இருக்கும் பொழுது இருந்து இதுவரை வீட்டு வரி கட்டி வருவதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக முசிறி கோட்டாட்சியர் துறையூர் வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
தற்போது தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் பட்டா வழங்கா விட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் தங்களது ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகம் திரும்ப ஒப்படைக்க போவதாகவும் கூறி வருகின்றனர்.