புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியில் வழிந்து ஓடும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 75
Stalin trichy visit

திருச்சி பிப் 6  திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேந்திரன். முன்னாள் அரசு வழக்கறிஞர். இவர் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் உதவி கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது, இந்தக் குடியிருப்பின் பாதாள சாக்கடை பழுதடைந்து
கழிவுநீர் பிரதான சாலையில் ஓடுகிறது.மேற்படி குடியிருப்பின் அருகில் தனியார் உணவகம் உள்ளது.அதனுடைய புதை வடிகால் பழுதடைந்த காரணத்தால் மாநகராட்சியில் இருந்து ஊழியர்கள் வந்து பழுததை சரி செய்தனர். ஆனால் அந்த பழுது சரிவர பார்க்காத காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள முதல் தளத்திற்கு கீழ்பகுதியில் இருந்து கழிவு நீர் கசிந்து தேங்கியுள்ளது. மேலும் பக்கத்த ஓரத்தில் கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது.இதனால் சாலையில் சுகாதாரத் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் கழிவுநீர் தேங்கிய காரணத்தால் கொசு தொல்லையும் அதிகரித்து மேற்படி அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது.எனவே வழிந்து ஓடும்.சாக்கடை நீரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.