மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கல்
திருச்சி, மார்ச் 12 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற உறுப்பினர் 2023- 2024 ஆம் ஆண்டு நிதியிலிருந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலகம் சார்பாக 5 நபர்களுக்கு தலா ரூ 96000 மதிப்புள்ள மூன்று சக்கர மோட்டார் வாகனம் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சந்திரமோகன், உதவி அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.