பொது சுகாதார நகர்நல மைய கட்டடம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி, பிப். 16 திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் 15ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது சுகாதார நகர்நல மையத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று 16.02.2024 பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் சுப்பிரமணியன், உதவி இயக்குனர் பேரூராட்சிகள் காளியப்பன், முக்கிய பிரமுகர் வைரமணி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.