புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் அமைந்துள்ள குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இத்தேரோட்டத்தில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் அமைந்துள்ள குளுந்தாளம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 15ஆம் தேதி சித்திரை முதல் செவ்வாய்கிழமை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் ஏப்ரல் 22 ம்தேதி இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று மறுகாப்பு கட்டப்பட்டது. கடந்த 23ஆம் தேதி முதல் காலை குளுந்தாளம்மன் சாமி ஊரின் வடபால் எல்லையில் இருந்து புறப்பட்டு கிராமத்தின் நடுவே உள்ள அலங்கார மண்டபத்திற்கு வந்தடைந்தது.இதனையடுத்து தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலா நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
அனைவரும் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. இரவு 10 மணிக்கு மேல் தங்க பல்லக்கில் சாமி திருவீதியுலா நடைபெறுகிறது தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை இரவு மஞ்சள் நீராட்டும் 3ம்தேதி காலை விடையாற்றி நிகழ்வு மற்றும் குடிபுகுதல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,கிராமத்தின் கரைக்காரர்கள்,திருப்பணி குழுவினர்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.