ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.மனோகரனுக்கு உற்சாக வரவேற்பு

0 213
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28 ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.மனோகரனுக்கு  கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி   தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அந்த வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர் மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் பொதுச் செயலாளர்  எடப்பாடி  பழனிசாமியை  சந்தித்து விட்டு சாலை மார்க்கமாக திருச்சிக்கு வருகை தந்த ஆர். மனோகரனுக்கு திருவானைக்காவல் அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் வெடி வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.