தையற் கலைஞர்கள் தின விழாவை முன்னிட்டு பேரணி
திருச்சி, பிப். 27 மணப்பாறையில் தையற் கலைஞர்கள் தின விழாவை முன்னிட்டு நடந்தது.
பிப்ரவரி 27 ம்தேதி தையற் கலைஞர்கள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தையற் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.
மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய பேரணியை மணப்பாறை டிஎஸ்பி., ராமநாதன் தொடங்கி வைத்தார். பேரணியானது கச்சேரி சாலை, புதுத்தெரு, பேருந்து நிலையம், மதுரை சாலை வழியாக பூமார்க்கெட் அருகே சங்க அலுவலகத்தில் முடிவடைந்தது.
பின்னர் சங்க அலுவலம் முன்பு மாநிலத்தலைவர் சீத்தாமலை சங்க கொடியை ஏற்றிவைத்தார். இதில் தையற்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், மகளிர் தையற் கலைஞர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.