மணப்பாறையில் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைப்பு : திருச்சி மெயிலுக்கு நன்றி தெரிவித்த சி.பி.ஐ.(எம்)

0 326
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 14  மணப்பாறை நகராட்சி சாலைகளில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகளைசரி செய்ய கோரி CPI(ML) கட்சி நகர செயலாளர் பாலு தலைமையில் பல்வேறு அலுவலர்களுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் இரவோடு இரவாக  அந்த பணி நிறைவு பெற்றது

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சாலைகளில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகளைசரி செய்ய கோரி CPI(ML) கட்சி நகர செயலாளர் பாலு தலைமையில் பல்வேறு அலுவலர்களுக்கு மனு அளிக்கப்பட்டு சாலை மறியல் போராட்டம் செய்ய இருந்த நிலையில் இரவோடு இரவாக சாலைசரி செய்யப்பட்டது.

கோரிக்கைகளை நிறைவேற்றிய வட்டாட்சியர். நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர், நகர்மன்ற தலைவர்,நகராட்சி ஆணையர், மற்றும் செய்தி வெளியிட்ட திருச்சி மெயிலுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) கட்சி நன்றி  தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.