சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
திருச்சி, ஜூலை 12 நாம் தமிழர் கட்சியை சார்ந்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் என்பவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என திருச்சியை சார்ந்த அருண்குமார் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து உள்ளார்
இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் போலீசார் நேற்று அதிகாலை தென்காசி பகுதியில் சாட்டை துரை முருகனை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர்
தொடர்ந்து அவரை திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்
தொடர்ந்து அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து வந்து திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (PCR) நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை என கூறி என்ற நீதி மன்ற காவலை ரத்து செய்தார்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும் போது சாட்டை துரைமுருகன் கூறுகையில், நான் தென்காசிக்கு கோவிலுக்கு சென்று விட்டு விடுதியில் தங்கியிருந்தேன் நான் ஒளிந்து ஓடவில்லை.
என்னை தென்காசியில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரும்போது இரண்டு இடங்களில் விபத்து ஏற்படுத்தி என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் எனது கார் பின் கண்ணாடி உடைந்து பின்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.