சாலையை சரிசெய்யக்கோரி போராட்டத்திற்கு தயாரான மக்கள் பிரதிநிதிகள், சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர்; சமாதானப்படுத்திய ஜீயபுரம் வருவாய் ஆய்வாளர்!
திருச்சி – கரூர் சாலையில் அந்தநல்லுர் முதல் கொடியாலம் வரையிலான 1500 மீட்டர் சாலையில் உள்ள அபாயகரமான பள்ளங்களை சீரமைக்க கோரியும், உடனடி நடவடிக்கை வேண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜன் பன்னீர்செல்வம், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் திண்டுக்கரை கோபால், ஊராட்சி உறுப்பினர் திண்டுகரை ஆனந்த், மேக்குடி ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சாலை பயனீட்டாளர் நல அமைப்பு அய்யாரப்பன், திருப்பராய்துறை கூட்டுறவு வங்கி தலைவர் கொடியாலம் சுப்பரமணியன், ஆகியோர் ஜீயபுரம் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி தொடர்ந்து இன்னும் இரண்டு தினங்களில் சாலை பழுதுகள் சீரமைக்கபடும் என்றும் கூறியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைத்தனர்