லால்குடி அருகே உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ. 4.70 லட்சம் பறிமுதல்
திருச்சி, மார்ச் 27 திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் திருச்சி ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் அரங்கநாதன் தலைமையில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது டாட்டா நெக்ஸான் காரில் வந்த சென்னை அம்பத்தூர் பகுதியை ஆண்டுனி விகாஷ் என்பவரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ 4.70 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 4.70 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து லால்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.