சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெகு சிறப்பாக செயல்பட்டு வரும் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 8 -ஆம் ஆண்டு விழா பிப்.17 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்புரை நிகழ்த்தி கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மாணவர்களோடு கலந்துரையாடி அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
முன்னதாக கார்த்திகேயா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் சௌமா ராஜரத்தினம் தலைமையுரை நிகழ்த்தினார். கார்த்திகேயா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ARK. ராஜாராம் மற்றும் பள்ளியின் தாளாளர் ARK. அரவிந்த் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு
மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.