வியாபாரி மீது கொலை வெறி தாக்குதல் எஸ்.டி.பி.ஐ வர்த்தக அணி கண்டனம்
திருச்சி, மே 16 திருச்சி காந்தி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வர்த்தக அணி தலைவர் அப்துல் மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளர். திருச்சி கல்பாளையத்தில் வசித்து வரும் வி.ஏ.ஓ கலைவாணி ஸ்ரீரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் எம்.ஏ.ஜெ. டிரேடர்ஸ் என்னும் கடையில் புளி வாங்கியுள்ளார். பின்னர் இந்த புளி இது சரியில்லை உன்னிடம் தான் வாங்கினேன் என்று அந்த கடையில் வாக்குவாதம் செய்துவிட்டு, நான் உனக்கு யார் என்று காட்டுகிறேன் என்று மிரட்டல் விடுத்தார். பின்னர் கல்பாளையம் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குண்டர்களை வரவைத்து அப்போது கடையில் இருந்த இப்ராஹிம் என்பவரை கடுமையாக கொலை வெறியோடு தாக்குதல் நடத்தி, கடையையும் அடித்து நொறுக்கி கடையில் இருந்த ரொக்க பணம் ஒன்றரை லட்ச ரூபாய் (1.5 லட்சம்) திருடியும்,கடையை முற்றிலுமாக சேதப்படுத்திவிட்டு கடையில் பணிபுரியும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர்.
இது சம்பந்தமாக காந்தி சந்தை காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் சாதிக்பாஷா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அப்துல் மாலிக் கூறுகையில், வி.ஏ.ஓ கலைவாணி மற்றும் வியாபார ஸ்தலத்தை சூறையாடிய குண்டர்கள் மீதும் உரிய நடவடிக்கை இல்லையெனில் மார்க்கெட் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும். வியாபாரிகளை அச்சுறுத்தும் இது போன்ற அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வி.ஏ.ஓ. பதவியை தவறாக பயன்படுத்தும் இது போன்ற அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.