தீபாவளிக்கு பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் – திருச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்!
மணப்பாறை எடுத்த பழையகோட்டையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜா என்கிற வீரசிகமணி இல்ல விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது… “ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை. பல இடங்களில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. இதில் ஸ்டாலின் பெருமைப்பட்டுக் கொள்வதில் எந்த விஷயமும் இல்லை. ஈ.வே.ரா வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்பவர்களை கைது செய்வது தான் இப்போது போலீசின் வேலை. கல்யாணராமன் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
பள்ளிகளை தீபாவளிக்கு பின்னரே திறக்க வேண்டும். தலை சிறந்த ஆட்சியை கொடுத்தவர் எடப்பாடி. அவரின் ஆட்சியில் மின்வெட்டு தண்ணீர் பிரச்சனை கிடையாது. எனவே மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்” என்றார்