சோசியல் மீடியா பிரபலம் சூர்யா தேவியின் தற்கொலை நாடகம் – நள்ளிரவில் மணப்பாறையில் பரபரப்பு!

0 484
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை, காந்திநகரில் வசித்து வருபவர் சூர்யா தேவி (35), கணவரை பிரிந்து வாழும் இவருக்கு சிவரஞ்சனி, சேது என்ற மகளும் மகனும் உள்ளனர்.

அரசியல் சினிமா நடிகைகள் மற்றும் டிக் டாக் பிரபலங்களை கடுமையாக திட்டி சோசியல் மீடியாக்களில் வீடியோ வெளியிட்டு அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை வனிதா விஜயகுமார், டிக் டாக் பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா உள்ளிட்ட பலரையும் திட்டி வீடியோவாக சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு அதன்மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டவர். சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் டிக் டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தருடன் தகராறில் ஈடுபட்டு அவரை செருப்பால் அடித்துள்ளார்.

செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சூர்யாதேவிமீது மதுரை, சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவான சூர்யா தேவியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று மதுரை காவல்துறை ஆணையருக்கு ஒரு வீடியோவை அனுப்பிய சூர்யா தேவி தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து மதுரை சிட்டி கமிஷனர் மணப்பாறை டிஎஸ்பி பிருந்தாவுக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் காந்திநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது வீட்டின் கதவை உள்பக்கம் தாழிட்டிருந்தது.‌

இதனையடுத்து மணப்பாறை தீயணைப்புத்துறையினரை வரவழைத்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டினுள் படுக்கையறையில் மின்விசிறியில் வேஷ்டியை தூக்கு மாட்டிக் கொள்வது போல் கட்டிவைத்துவிட்டு போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்ததுகூட தெரியாமல் அங்கிருந்த கட்டிலில் சூர்யா தேவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் இதுவும் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நாடகமாடி நம்மை அலறவிட்டுள்ளாரா என போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரிடம் தான் மன உளைச்சலில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்த சூர்யா தேவியை ஆறுதல் படுத்திய போலீசார் அங்கிருந்து அவரையும் அவரது மகளையும் பக்கத்து தெருவில் இருந்த அவரது தாத்தா சாமியிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். வீட்டை விட்டு வெளியில் வந்த சூர்யாதேவியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திட்டி தீர்த்தனர்.

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போலீஸ் கமிஷனருக்கு வீடியோ அனுப்பிவிட்டு போலீசாரை அலறவிட்டு வீட்டினுள் ஹாயாக தூங்கிய சூர்யா தேவியால் நள்ளிரவில் மணப்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது. பிரபலங்களை திட்டி விளம்பரம் தேடிக்கொள்ளும் சூர்யா தேவியின் தற்கொலை நாடகமும்ம் ஒரு விளம்பரம் தானோ? என போலீசார் நொந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.