கருமண்டபம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

0 23
Stalin trichy visit

திருச்சி, அக்.15 திருச்சி மாநகராட்சி 56 வார்டு கருமண்டபம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, 56ஆவது வார்டு கருமண்டபம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் சரவணன், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உடன் மேயர் மு.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.