தொட்டியத்தில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி, அக்.25 தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மருத்துவ கல்லூரி டின் குமரவேல் தலைமை வகித்தார்.மாவட்ட சுகாதாரமருத்துவ அலுவலர்ஹேமசந்த் காந்திமருத்துவத்துறை இணை இயக்குனர் கோபிநாத் தொட்டியம் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் தொட்டியம் பேரூராட்சி செயலாளர்கள் இளவரசி தொட்டியம் அரசு மருத்துவமனை தலைமைமருத்துவர் காந்திமதி தொட்டியம் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் முகாமை துவக்கி வைத்தார்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்தி ரூ 5 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட நான்கு பெட்ரோல் ஸ்கூட்டர் ஐந்து மடக்கு சக்கர நாற்காலி ஒருவருக்கு செயற்கை கால் நான்கு காது கருவி ஆகியவற்றை எம்எல்ஏ தியாகராஜன் வழங்கினார்.
முகாமில் இருதயம், நுரையீரல், எலும்பு சிகிச்சை முடநீக்கியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மருத்துவர்கள்கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.முகாமில் நோயாளிகளுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு மருத்துவ சான்று மற்றும் மருந்துகள் மாத்திரைகள் வழங்கினர். முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.