20 லட்சம் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
திருச்சி, அக்.21 திருச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
ஒவ்வொரு துறையும் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரின் அறிவுறுத்தலின்படி செய்து வருகிறோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பட்டா போன்றவற்றை விரைவாக கொடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம்.
20 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் அந்தப் பணிகளை விரைந்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நவம்பர் மாதத்திற்குள் பெரும்பாலான பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ரேகை சரியாக பதியவில்லை என்று குறைபாடு உள்ளது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
தமிழக அரசு மூன்று மாத காலமாக என்ன பணிகளை நிறைவேற்ற வேண்டுமோ அதனை செய்து கொண்டிருக்கிறோம்.
சென்னை மாநகராட்சி பொருத்தவரை 15 மண்டலங்களாக பிரித்து 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 7 அமைச்சர்கள் குழுவை அமைத்து குழுவின் மூலமாக முதலமைச்சர் ஆய்வு பணிகளை என்ன நடைபெற்று இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம்.
இயற்கை பாதித்த போது அதனை பாதுகாப்பது கடமை ஐந்தாண்டு திமுக காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை. மூன்று மாதங்களில் தமிழக வெற்றிக்கழக அரசு தான் மழை நீர் பணி விரைவாக முடித்து வருகிறது