மணப்பாறையில் திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

0 14
Stalin trichy visit

திருச்சி, செப்.11-திருச்சி மாவட்டம்,  மணப்பாறையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்ததோடு, அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று இரவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம் முன்பு மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மேலும் இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.