திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால பயிற்சி

0 363
Stalin trichy visit

திருச்சி, மே 27  திருச்சி  மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து மூன்றாவது நிகழ்வாக மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைக் கால பயிற்சி வாசகர் வட்டத் தலைவர் வீ.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் து.காந்தி அறிவியல் பாடல் பாடி அனைவரையும் வரவேற்றார்.

வாசகர் வட்ட உறுப்பினர் வைகுண்ட மூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அறிவியல் அற்புதங்களை எளிமையான முறையிலும், நகைச்சுவையுடனும் மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் பாடலுடன் விளக்கி காண்பித்து மகிழ்வித்தார்.

மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் சு.தனலெட்சுமி, மாவட்ட இணைச் செயலாளர்களான ச.மாரிமுத்து, க.பகுத்தறிவன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார்கள்.

பெற்றோர்கள், மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பாக பங்களிப்பு செய்த மாணவர்களுக்கு துளிர் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

நிறைவாக  மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜா.ரெய்னாட் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.