தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சி நவ 19 தமிழக விவசாயிகள் சங்கம், காவிரி உரிமை மீட்பு குழு மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் திருச்சி காதி கிராப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராமல் தடுத்து மேகதாது அணை கட்ட அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பாரம்பரிய காவிரி தண்ணீர் உரிமையை பாதுகாக்க சட்ட வல்லுனர்களை கலந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா உள்ளிட்ட 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரத்தை பறித்து பாலைவனமாக்குவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள்.