சபரிமலையில் தமிழக சிறுமி உயிரிழப்பு: அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்பா சேவா சங்கம் கண்டனம்
திருச்சி, டிச. 15 அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் தேசிய தலைவர் ஆறுமுகம், தேசிய செயலாளர் தினேஷ் அளித்த அறிக்கையில்
தமிழகத்தை சேர்ந்த பத்மா ஸ்ரீ.சிறுமி சபரிமலையில் கூட்டம் நெரிசல் காரணமாக அவர் மூச்சு திணறி உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தை சரியாக கட்டுப்படுத்தாமல் இருந்த காரணமாகவே சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தார். இதை அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
உயிரிழந்த சிறுமிக்கு கேரளா அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்பா சேவா சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க குழந்தைகளுக்கு என்று சிறப்பு தனி வரிசை ஏற்படுத்த வலியுறுத்துகிறோம்.
சபரிமலையில் நாளுக்கு நாள் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாய் கொண்டே இருக்கிறது இருந்தும் தேவசம் தரப்பில் சரியான வசதி செய்து தரவில்லை இதை அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
சபரிமலையில் பேருந்து வசதிகள் பக்தர்களுக்கு செய்து
தருவதில்லை. அப்படி செய்து கொடுத்தாலும் ஒரு பேருந்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குஉள்ளாகிறார்கள்பக்தர்கள் வரும் வாகனத்தைநிலக்கலிலிருந்துபம்பாவிற்குவிடுவதில்லை.உடனடியாக பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும்.
சபரிமலையில் 20 மணி நேரம் நின்றும் ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் மனம் வருந்தி செல்கிறார்கள். இதற்கு முழு காரணம் சபரிமலையில் பாதுகாப்பு பற்றாக்குறை. காவல்துறை அதிகப்படுத்த வேண்டும்
தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பறை வசதி எதுவும் செய்து தரவில்லை இதை அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்
தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பறை வசதிகள் உடனடியாக செய்து தர வலியுறுத்திகிறோம்.
மேல் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கேரளா திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.