பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் கே. என். நேரு
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதல்வர் முதல்வர் உத்தரவின்படி 80 கோடி ரூபாயில் தூர் வாரும் பணியில் நடைபெற்று வருகிறது – அமைச்சர் கே. என். நேரு பேட்டி
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து
பஞ்சப்பூர் கலைஞர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் வரை புதிதாக 9 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை வரும் 12ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக தமிழக முதல்வர் உத்தரவின்படி ௹ 80 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பாசனத்திற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள்
படிப்படியாக தூர்வாரப்படும்.
திருச்சி பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,
அந்தப் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தப் பணிகள் இன்னும் 9 தினங்களில் முடிவடையும்
பணிகள் நிறைவடைந்த உடன் புதிய சாலை போடப்படும் என்றும்,
திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாரே என வினா எழுப்பப்பட்டதற்கு…
இது குறித்து நான் எதுவும் கருத்து கூற இயலாது தலைமை முடிவெடுக்கும் என்றார்.
திருச்சி நகரப்பகுதி வழியே செல்லும் உய்யகொண்டான் கால்வாயில் பரந்து கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்துள்ளதால் அதனை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
நகராட்சி பொருத்தவரை எந்தெந்த இடம் என நிர்ணயிக்கப்பட்ட விடயங்களில் தூர் வாரும் பணியில் துவங்கப்பட்டுள்ளது.
சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடையில் ஏலம் விடப்பட்டுள்ளது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.