கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் தளிர் வசந்தம் 2026 பள்ளிகளுக்கு இடையிலான கலைப் போட்டி

0 15
Stalin trichy visit

திருச்சி, செப். 14  கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் தளிர் வசந்தம் 2026 பள்ளிகளுக்கு இடையிலான கலைப் போட்டி விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள் பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார், முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புனித சிலுவை பிலாசம் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் சகோதரி ஜோஸ்பின் மோல் கலந்து கொண்டார். அவர்தம் சிறப்புரையில் இன்றைய மாணவச் செல்வங்கள் அன்பு, ஒற்றுமை, உதவி, அமைதி ஆகிய பண்புடன் திகழ்வதற்கு கலைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நான் என்று சொல்லும் போது உள்ளம் விரியாது நாம் என்று சொல்லும் பொழுது உள்ளங்கையும் உலகமும் விரிவாக விரிவடையும் கலைகளின் வழியாக சமய நல்லிணக்கத்தை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும், எத்தகைய சமையத்தவராக இருந்தாலும் சமூக மாற்றத்திற்காக ஒரு தோட்டத்து மலர்கள் போல தனித்துவத்தோடு ஒற்றுமையோடும் வாழ்வை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு சிறு இசைக் குறிப்பைவிட எல்லோரும் சேர்ந்து கைதட்டும் பொழுது அது பேரிசை வடிவம் பெறுகிறது, பல மதத்தவர்கள் இணைந்து கலைகளின் வழியாக நல்ல செய்தியை சமூகத்திற்கு வழங்க வேண்டும் வெறுப்பை பின் தொடராமல் அன்பை பின் தொடர்ந்து அன்பை பகிர்ந்து வெறுப்புணர்வை இதயத்தில் தடை செய்ய வேண்டும். போட்டிகளில் பெயரைப் பதிவு செய்வதே முதல் வெற்றி எனவே வெற்றி பெறுவதை விடவும் பங்கேற்பது பாராட்டுக்குரியது என்றார்

Leave A Reply

Your email address will not be published.