முதலமைச்சர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் முன்னேற்பாடு : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 207
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 19  முதலமைச்சர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் முன்னேற்பாடு : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தி.மு.க திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 22 ஆம் தேதி மாலை சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சார கூட்ட முன்னேற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், 2024 ஆம் ஆண்டிற்காக தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் சிறுகனூரிலிருந்துதொடங்குகிறது. அந்த பிரச்சாரம் தேர்தலில் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.